மாயாவதி பிரசாரத்துக்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 12:12 pm
supreme-court-refused-to-remove-the-ban-on-mayawati-campaign

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அண்மையில் மாயாவதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, முஸ்லிம்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று புகார் எழுந்தது. இந்நிலையில், மாயாவதி பிரசாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து மாயாவது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் தற்போதுதான் முழித்துக் கொண்டு, தனது அதிகாரத்தை பயன்படுத்துவதுடன், அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாயாவதிக்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க மறுத்துவிட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close