ராகுல் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய கோரி வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 06:10 pm
seeking-direction-to-police-for-registration-of-fir-sedition-charges-against-rahul-gandhirahul

பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜொஹிந்தர் துலி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த வழக்கை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஒப்புக் கொண்டது.  இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களும் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இதுதொடர்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, "மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது" என்றார்.

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close