பெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 07:11 pm
judiciary-under-threat-chief-justice-denies-sex-harassment-allegation

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார்.

அப்போது அவா்,உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன். பொய் புகார் பரப்பும் பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close