மோடியை திருடர் எனக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 12:44 pm
rahul-gandhi-regretted-in-supreme-court-for-saying-modi-as-thief

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடர் எனக் கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். 

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் மோடியை திருடர் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, பாஜக சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடாத ஒன்றை ராகுல் காந்தி பேசியிருப்பதாக அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பாஜகவின் மனுவுக்கு, பதில் அளிக்கும் ஆவணம், ராகுல் காந்தி சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”என்னுடைய கருத்துக்களை அரசியல் எதிரிகள் திரித்துக் கூறி விட்டனர். மேலும், அரசியல் பிரசார வேகத்தில் அப்படிப் பேசி விட்டேன். நீதிமன்றம் இதை ஒருபோதும் சொல்லவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது துரதிருஷ்டவசமானது’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close