ரஞ்சன் கோகோய் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு அருண்ஜெட்லி கண்டனம்

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 06:39 pm
arun-jaitley-backs-cji-ranjan-gogoi-slams-complaint-and-institution-disruptors

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறையின் மீதான தாக்குதல் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொிவித்துள்ளாா்.

இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி ஆதரவு நிலை கொண்ட, ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களும், பார் கவுன்சிலில் ஒரு பிரிவினரும் இணைந்து நீதித்துறை மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை முன்னெடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் புகார் கூறியவர், அந்த பிரச்சனையை பூதாகரமாக்கும் நோக்கத்தில், ஊடகங்களுக்கும் பிற நீதிபதிகளுக்கும் புகார் நகல்களை அனுப்பியுள்ளதாகவும் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறைக்கு நம்பகத்தன்மையும் மதிப்பும் அடிப்படையானவை என்றும், நீதித்துறை மீதான நல்லெண்ணம் சிதைந்தால் நீதித்துறையும் சிதைந்துவிடும் என அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close