அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 12:58 pm
sc-sends-contempt-notice-to-rahul-gandhi-in-modi-criticism-case

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து அவர் கொடுத்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்த ராகுல் காந்தி, பிரதமர்  மோடியை உச்சநீதிமன்றமே திருடர் எனக் கூறி விட்டது எனத் தெரிவித்தார். நீதிமன்றம் சொல்லாத ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளதாக புகார் தெரிவித்து பாஜக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த மனு குறித்த தனது பதிலை ராகுல் காந்தி நேற்று தாக்கல் செய்திருந்தார். அரசியல் பிரசார வேகத்தில் தான் அப்படிப் பேசிவிட்டதாகக் கூறி அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறிய நீதிபதிகள், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close