குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 03:48 pm
2002-riots-victim-bilkis-bano-to-get-rs-50-lakh-compensation-top-court

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த ராம பக்தர்களை எரித்துக் கொன்றதன் விளைவாக, அந்த நகரில் கலவரம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு என்ற பெண்ணிற்கு குஜராத் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு அயோத்தியிலிருந்து ராம பக்தர்கள் பயணம் செய்த வந்த ரயில், குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே வசித்து வந்தவர்களால் நிறுத்தப்பட்டு, ரயிலின் இரண்டு பெட்டிகளில் மண்ணெண்ணை ஊற்றி கதவை அடைத்து தீவைக்கப்பட்டது. இதில் அந்த இரண்டு பெட்டிகளில் பயணம் செய்த 58 ராம பக்தர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற கலவத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தரப்பில் 1300 பேர் கொல்லப்பட்டனர்.

வன்முறை நடைபெற்ற அந்த இரண்டு நாட்களில் அகமதாபாத் நகாில் உள்ள ரந்திக்பூா் கிராமத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணின் குடும்ப உறுப்பினா்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். அங்கு மயங்கி கிடந்த மில்கிஸ் பானு இறந்து விட்டதாக கருதிய வன்முறையாளர்கள் அவரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு 11 போ் கைது செய்யப்பட்டனா். ஆனால் போலீஸ் உயரதிகாாிகள் சிலா் இந்த வழக்கை சாியாக கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மும்பை உயா்நீதிமன்றம் அந்த காவல் அதிகாாிகளையும் குற்றவாளிகள் பட்டியலில் சோ்த்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குஜராத் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் அந்த பெண்ணிற்கு வசிக்க இடமில்லாததால் ஒரு வீடும், அரசு  வேலையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. பில்கிஸ் பானுவின் வழக்கறிஞா் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாாிகள் 4 போ் ஓய்வு பெற்று விட்டதாகவும், ஒரு ஐபிஎஸ் அதிகாாி மட்டும் பணியில் உள்ளதாகவும், அவா்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முன்னா் தொிவித்திருந்தாா்.

இதையடுத்து இது குறித்து அறிக்கை அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஓய்வு பெற்ற 4 காவல் துறை அதிகாாிகளின் ஓய்வுதிய பலன்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், பணியில் உள்ள ஒரு அதிகாாி பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close