உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான புகார் - விசாரணைக் குழு அமைப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 11:05 am
probe-panel-set-up-to-hear-case-against-cji

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இது துறை ரீதியான விசாரணையாக இருக்கும் என்றும், நீதிமன்ற நடைமுறை சார்ந்த விசாரணையாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை மதியம் தங்களது விசாரணையை தொடங்க உள்ளனர்.

முறைகேடு புகார் ஒன்றில் சிக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அண்மையில் முன்வைத்தார். ஆனால், இதன், பின்னணியில் மாபெரும் சதி இருப்பதாகவும், முக்கியமான வழக்குகளை தான் விசாரிக்க இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் ரஞ்சன் கோகோய் விளக்கம் அளித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close