அமர்பாளி நிறுவன மோசடி- உச்சநீதிமன்றத்தில் தோனி முறையீடு-

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Apr, 2019 06:29 pm
ms-dhoni-moves-top-court-against-amrapali-group-over-alleged-cheating

அமர்பாளி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து தனக்கு தர வேண்டிய வீட்டையும், விளம்பரத் தூதராக நடித்தமைக்காக தர வேண்டிய 40 கோடி ரூபாயையையும் வழங்க உத்தரவிடக் கோரி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் அமர்பாளி ரியல் எஸ்டே நிறுவனம் செயல்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அமர்பாளி சபாரி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் தோனி ஒரு வீடு வாங்கி இருந்தார். மேலும் அமர்பாளி நிர்வாகம் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனியை நியமித்தனர். 

இந்த நிலையில் பல்வேறு விளம்பரங்களில் அமர்பாளி நிறுவனத்துக்காக தோனி நடித்தும் கொடுத்துள்ளார். மேலும் இது கடந்த 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை பல்வேறு விளம்பரங்களில் இந்த நிறுவனத்துக்காக தோனி நடித்தார்.

இதையடுத்து திடீரென அமர்பாளி நிர்வாகம் நிதிநெருக்கடியில் சிக்கியதை அடுத்து, வீடு முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீட்டை கொடுக்க முடியாத சூழ் நிலையும் ஏற்பட்டது.   

இதுதொடர்பாக ஏற்கனவே வீட்டுக்காக பணம் அளித்த 46 ஆயிரம் பேர் அமராபாளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர். இந்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தோனி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமர்பாளி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்காக பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தேன் 

அதற்கான நிலுவை தொகை 40 கோடி ரூபாயை வழங்கவில்லை அதை பெற்றுத்தரக் கோரி மனுத் செய்திருந்தார். அதோடு அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமர்பாளி நிறுவனத்தின் சொத்துக்களையும், அதன் துணை நிறுவனத்தின் சொத்துக்களையும் முடக்க உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் தோனி சார்பில்  உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமர்பாளி ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் தான் வீட்டுக்கு பணம் செலுத்தி இருந்தேன். அந்த வீட்டை இன்னும் வழங்கவில்லை. அந்த வீட்டை நீதிமன்றம் கையகப்படுத்தி தனக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close