பிரதமர் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 11:02 am
case-against-pm-modi

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்துள்ளது. 

நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொ, ண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் விதிகளை மீறி மத, சாதி ரீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஷ்மிதா தேவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி காங்கிரஸ் கட்சி முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். மேலும், பிரதமர் மீதான வழக்குகளை முறையிடும் போதும் வாதங்களை முன்வைக்கும் போதும் பிரதமரின் பெயரை குறிப்பிட வேண்டும் என்றும், பிரதமரின் பெயரை குறிப்பிடாமல் வழக்கறிஞர்கள் கண்ணாமூச்சி விளையாடாதீர்கள் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close