ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 12:48 pm
supreme-court-to-hear-a-plea-about-rahul-gandhi-s-citizenship

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, இரட்டைக் குடியுரிமை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை நடத்தவுள்ளது.

முன்னதாக, ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமன்றி, பிரிட்டனிலும் குடியுரிமை இருப்பதாக பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார். அதுதொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதற்கிடையே, அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. முன்னதாக, ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close