இஷ்ரத் ஜஹான் வழக்கில் இருந்து காவல் அதிகாரிகள் விடுவிப்பு

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 01:28 pm
ishrat-jahan-case-probe-against-retired-cops-discharged

இஷ்ரத் ஜஹான் என்கவுண்டருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் வன்சாரா, என்.கே.அமீன் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண்ணை காவல்துறை என்கவுண்டர் செய்தது. அது போலியான என்கவுண்டர் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளான வன்சாரா, ஏ.கே.அமீன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வாத, பிரதி வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், அவர்களது கோரிக்கையை ஏற்று வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close