பாலியல் வழக்கு : பேராசிரியருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 07:10 pm
delhi-hc-has-issued-notice-to-delhi-police-in-a-plea-seeking-direction-to-them-to-file-charge-sheet-against-jnu-prof-atul-johri

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி, டெல்லி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, ஜலாஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரான அதுல் ஜோஹ்ரி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை டெல்லி போலீஸார், கடந்த மார்ச்  20 -ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், அதுல் ஜோஹ்ரி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு டெல்லி  உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேராசிரியருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடும்படி மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, இதுதொடர்பாக டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஜெ.ஆர்.மிதா, வழக்கின் விசாரணையை, வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close