குழந்தை திருமணம் செல்லும்: மும்பை கோர்ட் வினோத தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 04:52 pm
marriage-with-minor-girl-is-valid-bombay-high-court

மும்பையில், 14 வயது சிறுமியை திருமணம் செய்த நபர், அந்த சிறுமி தற்போது மேஜர் ஆனதாலும், அந்த சிறுமிக்கு, 11 ஏக்கர் நிலமும், 7.5 லட்சம் ரொக்கமும் தர சம்மதம் தெரிவித்ததாலும், அந்த திருமணம் செல்லும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

மும்பையை சேர்ந்த ஒர் நபர், தன் முதல் மனைவி இறந்ததை அடுத்து, 2014ம் ஆண்டு, 14 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்தார். இது குறித்து, சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியை திருமணம் செய்த நபர், சிறுமியை திருமணம் செய்து கொடுத்த சிறுமியின் தாத்தா, பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பின் ஜாமினில் வெளியாகினர். தற்போது அந்த சிறுதி, மேஜர் ஆகிவிட்டதால், தன்னை திருமணம் செய்த நபருடனே சேர்ந்த வாழ விரும்புவதாகக் கூறி, மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எதிர் தரப்பின் வாதத்தையும் கேட்டனர். 

அப்போது சிறுமியாக இருந்த போது, அந்த பெண்ணை திருமணம் செய்த நபர், அந்த பெண்ணின் பெயரில், 6 ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளதாகவும், விரைவில்,மேலும் 5 ஏக்கர் நிலம் எழுதி வைப்பதாகவும் கூறினார். மேலும், அந்த பெண்ணின் எதிர்கால நலன் கருதி, அவரது வங்கிக் கணக்கில், 7.5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்துவதாகவும் கூறினார். 

இதை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: ‛‛சிறுமியாக இருந்த போது அவரை திருமணம் செய்த நபர், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த சிறுமி மேஜர் ஆகிவிட்டார். 

அவருக்கு ஏற்கனவே திருணம் ஆகிவிட்டது என்பதால், சமுதாயத்தில் இனி அந்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். மேலும், சிறுமியாக இருந்த போது தன்னை திருமணம் செய்வரை, தற்போது கணவராக ஏற்பதாக அந்த பெண்ணே சம்மதம் தெரிவித்துள்ளார். 

அந்த பெண்ணின் எதிர்கால நலன் கருதி, அவருக்கு நிலமும், பணமும் வழங்க அவரை திருமணம் செய்த நபர் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பெண், தன்னை திருமணம் செய்த நபருடனே சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளிக்கிறோம்’’ இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

தமிழ் திரைப்படம் ஒன்றில், நடிகர் விவேக் நடித்த காமெடி சீன் ஒன்றில், பலாத்காரம் செய்த பெண்ணுக்கு நஷ்ட ஈடாக பணம் கொடுத்துவிட்டால், குற்றவாளிக்கு எந்த தண்டனையும் கிடையாது என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்படும். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் விவேக்கிடம், நஷ்ட ஈடு கட்டிய மைனர் குஞ்சு என்ற கேரக்டர், அடுத்து செய்ய இருக்கும் பலாத்காரத்துக்கும் முன்னதாகவே, பஞ்சாயத்தில் பணம் கட்டியுள்ளதாகக்கூறி விவேக்கை மேலும் அதிர்ச்சியுறச் செய்வார். 

அந்த சினிமா பஞ்சாயத்தில் கூறியது போலத்தான், தற்போது மும்பை நீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர். இப்படி , குழந்தை திருமண சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்ட நபர், எதிர்காலத்தில் சிறுமி மேஜர் ஆனதும், அவரை மிரட்டி, தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டால், யாரும் யாரையும் திருமணம் செய்யலாம் என்ற அபத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவே பல்வேறு தரப்பபினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in


 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close