தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் -க்கு எதிராக பெண் ஊழியர் தொடுத்த பாலியல் புகாரை, சிறப்பு விசாரணைக் குழு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி வரையில் இந்த தடை உத்தரவு இருக்கும் என்றும், தொடர்ந்து டெல்லி போலீசார் கருதும்பட்சத்தில், தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in