மனைவியுடன் சமரசம்: தப்பினார் எம்.எல்.ஏ.,

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 04:16 pm
delhi-hc-quashes-fir-against-aap-mla

டெல்லியை சேர்ந்த, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை சமரசத்தில் முடிந்ததால், அவருக்கு எதிராக, அவரது மனைவி அளித்த புகார் ரத்து செய்யப்பட்டது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதி. இவர், தன்னை கொடுமைப்படுத்துவதாக, அவரது மனைவி லிபிகா மித்ரா, 2015ம் ஆண்டு பெண்கள் நல வாரியத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட மாேதல் போக்கு சுமுகமாக முடிந்ததை அடுத்து, இருவரும் தற்போது சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும், டெல்லி குடும்பநல நீதிமன்றத்திலும், இந்த தகவல் பதிவு செய்யப்பட்டது. 

சாேம்நாத் பாரதி மீதான எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்ய, அவரது மனைவி எவ்வித ஆட்சேபனமும் தெரிவிக்காததாலும், இருவரும் எந்த பிரச்னையும் இன்றி சேர்ந்து வாழ்வதாலும், பாரதி மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதனால், சோம்நாத் பாரதி மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close