பாஜக நிர்வாகியை விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 12:09 pm
sc-censures-bengal-govt-over-delay-in-release-of-bjp-youth-wing-convenor-priyanka-sharma

மம்தா பானர்ஜி மீம்ஸ் விவகாரத்தில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க பாஜக இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை பொருத்தி, மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. 

தொடர்ந்து, முதல்வரை தவறாக சித்தரித்தற்காக மேற்கு வங்க போலீசார், பிரியங்கா சர்மாவை கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஹவுரா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், பிரியங்கா சர்மா ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரணையில், பிரியங்கா சர்மாவுக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கியதுடன் உடனே விடுவிக்கவும் உத்தரவிட்டனர். 

ஆனால், இன்று காலை 10 மணி வரையில் பிரியங்கா சர்மாவை மேற்குவங்க அரசு விடுவிக்கவில்லை. இதையடுத்து, சர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close