21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 03:53 pm
sc-dismisses-pil-seeking-100-matching-of-vvpat-slips-with-evms-during-vote-counting-on-may-23

வாக்கு எண்ணிக்கையின் போது, 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை, வாக்குப்பதிவு இயந்திரங்களோடு ஒப்பிட வேண்டுமென 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிட, 50% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கடந்த மே 7ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும்  என 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விடுப்பு கால நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், "ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 5 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரங்களோடு ஒப்பிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றமும் இதுபோன்ற ஒரு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால் அதனை மீற முடியாது. 100% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணுவது என்பது சாத்தியமானது அல்ல. எனவே இதுகுறித்து இனிமேல் வழக்கு தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close