கார்த்தி சிதம்பரத்திற்கு 'ஃப்ரீ அட்வைஸ்' கொடுத்த உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 11:35 am
supreme-court-dismisses-kartichidambaram-s-plea-seeking-return-of-rs-10-cr-deposited-for-travelling-abroad

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவின் மீதான விசாரணையில், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, சிதம்பரம் தரப்பில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த முறை ஏற்கனவே 10 கோடி ரூபாய் நான் பிணைத் தொகையாக செலுத்தி உள்ளேன். அதனைத் திருப்பித் தரும் பட்சத்தில், அதனை வைத்து தற்போது பிணைத்தொகை செலுத்துவேன்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுமுறை கால அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே பிணைத் தொகையை தற்போது தர முடியாது என்று கூறி ம் மீண்டும் நானு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்வதை குறைத்துக்கொண்டு தொகுதி மீது கவனம் செலுத்துமாறும், மக்கள் பணியாற்றவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close