ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 01:00 pm
delhi-court-extends-protection-from-arrest-to-chidambaram-karti-till-august-1

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2006ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ -யின் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்ய அதிகாரிகள் கோரிய நிலையில், அதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. தொடர்ந்து இந்த தடையானது நீடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1 வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close