கார்த்தி சிதம்பரம் வழக்கு திடீர் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 05:07 pm
inx-media-case-transferred-to-mp-mla-special-court-from-cbi-court-as-karti-chidambaram-has-now-been-elected-member-of-parliament

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு விசாரணை, சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இருந்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகைள விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுத் தருவதில், சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக, சிபிஐ  அதிகாரிகள் வழக்கப்  பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்க விசாரணை சிபிஐ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், சிதம்பரத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்று எம்.பி.,யாக தேர்வாகியுள்ளார். 

இதனால், அவருக்கு எதிரான வழக்கு, சிபிஐ சிறப்பு கோர்ட்டிலிருந்து, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close