‛மாஜி’ கமிஷனருக்கு ஊரை விட்டு செல்ல தடை 

  Newstm Desk   | Last Modified : 30 May, 2019 06:28 pm
don-t-go-out-of-kolkatta-jigh-court-order-to-ex-commissioner-rajiv-kumar

சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கொல்கத்தா மாஜி கமிஷனர் ராஜீவ் குமார், அந்த நகரத்தை விட்டு வெளியே செல்ல, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 

சாரதா சிட்பண்டு ஊழலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டதுடன், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அழித்ததாக, கொல்கத்தா கமிஷராக இருந்த, ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு எதிராக, சிபிஐ அதிகாரிகள் வழக்கப்பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய திரிணமுல் காங்., தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, மிகப் பெரிய தர்ணா போராட்டத்தை நடத்தினார். பின், சிபிஐ அதிகாரிகள் முறையிட்டதின் பேரில், கோர்ட் தலையிடவே, மம்தா தர்ணாவை கை விட்டார். இதையடுத்து, ராஜீவ் குமார் கமிஷனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட, ராஜீவ் குமார், கொல்கத்தா நகரை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகள், தினமும் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்திற்கு சென்று, ராஜீவின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close