கத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 12:24 pm
ghatwa-girl-murder-case-6-people-convicted-as-criminals

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து பஞ்சாப் மாநில பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்வா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி கடத்தப்பட்டார். 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, பின்பு கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டார். இந்த வழக்கில் ஊர் தலைவரான சஞ்சய் ராம்,  காவல் அதிகாரிகள் தீபக், சுரேந்திரர் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த பஞ்சாப் மாநில பதான்கோட் சிறப்பு நீதிமன்றம், சிறுமி கொலை வழக்கில் சஞ்சய் ராம்,  தீபக், சுரேந்தர் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளித்துள்ளது.  சஞ்சய் ராமின் மகனான விஷால் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close