பொம்பள புள்ள மேல கை வெச்சவனுக்கு தூக்கு தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 07:09 pm
death-sentence-for-man-who-raped-murdered-4-year-old-child

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண  தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பெஹ்ரோர் எனுமிடத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு, நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், ராஜ்குமார் என்கிற தர்மேந்திரா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. தர்மேந்திரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close