வெஜ்ஜுக்கு பதில் நான் - வெஜ் அயிட்டம் டெலிவரி... சொமட்டோவுக்கு ஃபைன்!

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 06:51 pm
zomato-pune-hotel-fined-rs-55-000-for-delivering-chicken-instead-of-paneer

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரை சேர்ந்த வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர், உணவு வகைகளை ஆன்-லைனில் ஆர்டர் பெற்று, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து அவற்றை விநியோகம் செய்துவரும் சொமட்டோ நிறுவனத்தில் சைவ உணவு வகையான பனீர் பட்டர்  மசாலா ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், அந்நிறுவன ஊழியர் பட்டர் சிக்கனை இவருக்கு விநியோகம் செய்துள்ளார். தேஷ்முக் அதனை சுவைத்து பார்த்த பின்புதான், தமக்கு அசைவ உணவு வகையை நிறுவனம் தவறுதலாக வழங்கியுள்ளதை உணர்ந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், இதுதொடர்பாக புணே நுகர்வோர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, "சொமட்டோ நிறுவனம் மற்றும் இவ்வழக்கில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஹோட்டல் சேவை குறைபாடாக செயல்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகிறது. எனவே, இரண்டு நிறுவனங்களும் இணைந்து மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, "தேஷ்முக் ஆர்டர் செய்த பனீர் பட்டர் மசாலாவுக்கான தொகை அவருக்கு திரும்ப தரப்பட்டுவிட்டது. ஆனாலும், எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்" என சொமட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close