அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 11:07 am
ayodhya-case-order-to-file-interim-report

அயோத்தி வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும் படி சமரசக்குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும்,  அயோத்தி வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சமரசக்குழு சரியாக செயல்படவில்லை எனவும் இந்து அமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 18ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும் படி சமரசக்குழுவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close