9 வருஷமா கேஸ் இருக்குறது தெரியலையா ஜட்ஜ் ஐயா? எடியூரப்பா மீதான ஊழல் வழக்கை திடீரென தூசு தட்டும் உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 05:14 pm
supreme-court-to-hear-plea-to-reopen-corruption-case-against-bs-yeddyurappa

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, அங்கு ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, புதிய முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், எடியூரப்பா முன்பு முதல்வராக இருந்தபோது, நில அபகரிப்பு தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. 2010 -இல் தொடரப்பட்ட இவ்வழக்கின் நிலவரம் நேற்றுவரை என்னவென்று தெரியாமல் இருந்தது.

ஆனால், எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று திடீரென அறிவித்துள்ளது. இதில் மனுதாரரின் கருத்து முதலில் கேட்டறியப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடியூரப்பா முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்ற தகவல் வெளியான சில மணிநேரத்திலேயே, அவர் மீது ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக  நிலுவையில் உள்ள வழக்கை,  உச்ச நீதிமன்றம் திடீரென தூசு தட்டுவது, நமது நீதி பரிபால முறை குறித்த பல்வேறு கேள்விகளை சமூகத்தின் பல்வேறு தரப்பில் எழுப்பியுள்ளது.

இதேபோன்று,  2013- இல், தமது தலைமையில் பாஜக ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரியபோது, அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவருக்கு நீதிமன்றம் 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

அதேசமயம், அண்மையில் குமாரசாமி தலைமையிலான அரசு பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர, உச்ச நீதிமன்றம் கால அவகாசம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close