ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 10:08 pm
sc-orderd-to-ramlalla-to-submit-evidence-about-ram-mandir

"அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்" என ராம்லல்லா அமைப்புக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில்தான்,  மசூதி கட்டப்பதாக ராம்லல்லா அமைப்பின் சார்பில் தொடர்ந்து வாதாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் சில முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளது.

வழக்கு விசரணையின்போது, ராம்லல்லா அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது: "நீங்கள் குறிப்பிடும் இடத்தில் தொன்மை வாய்ந்த கட்டடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபர் மசூதிக்கு கீழ் பகுதியில் காணப்படும் அந்த கட்டிடம் ராமர் கோவில்தான் என்பதோ அல்லது ராமருக்கு அர்ப்பணித்து கட்டப்பட்டது என்பதையோ நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தால் தாக்கல் செய்யலாம்" என்றனர்.

இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், "பாபர் மசூதிக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டிடம் 2ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்பது இந்திய தொல்லியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது" என்றார். வழக்கு விசாரணை நாளைக்கு ஓதி வைக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close