கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம் 

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 05:52 pm
ayodhya-case-there-was-a-hindu-temple-at-the-place-of-babri-musjid

"அயோத்தியில் ஹிந்து கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. பூமிக்கடியில் கண்டறியப்பட்டுள்ள பிரமாண்ட கட்டிடம் ஹிந்து கோவில்தான் என தொல்பொருள் ஆராய்ச்சி கழகமே உறுதி செய்துள்ளது" என, அயோத்தி வழக்கில், ராம் லல்லா விராஜ்மான், சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.எஸ்.வைத்யநாதன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். 

அயோத்தி வழக்கில், ஒரு குறிப்பிட்ட இடத்தை ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தினசரி நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில கண்டறியப்பட்ட கட்டிடம் ராமர் கோவில்தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கில், ராம் லல்லா விராஜ்மான், சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.எஸ்.வைத்யநாதன், "அயோத்தியில் ஹிந்து கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. பூமிக்கடியில் கண்டறியப்பட்டுள்ள பிரமாண்ட கட்டிடம் ஹிந்து கோவில்தான் என தொல்பொருள் ஆராய்ச்சி கழகமே உறுதி செய்துள்ளது. அந்த கோவிலை புதைத்தோ அல்லது அந்த கோவில் இருந்த இடத்திற்கு மேலோதான், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. அது ஹிந்து கோவில்தான் என தொல்பொருள் ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close