காஷ்மீர் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 11:17 am
kashmir-case

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமர்வு விசாரத்து வந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பட்டது குறித்து 7 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close