சீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

  அனிதா   | Last Modified : 28 Aug, 2019 11:28 am
supreme-court-allows-sitaram-yechury-to-go-to-kashmir

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சீதாராம் யெச்சூரி, முகமது ஜலீல் உள்ளிட்டோர் அவர்களது நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, சீதாராம் யெச்சூரி தங்களது கட்சி நிர்வாகியான யூசுப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம் என்றும் முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது உறவினர்களை சந்திக்கலாம் எனகூறி, அவர்கள் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. நாட்டு மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், உறவினர்கள், நண்பர்களை மட்டும் தான் சந்திக்க வேண்டும் என்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close