சிதம்பரம் தப்பிக்கவே அதிகம் முயற்சி செய்கிறார்: அமலாக்கத்துறை

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 12:35 pm
chidambaram-is-trying-his-best-to-escape-the-enforcement-department

ப.சிதம்பரம் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக முயற்சி செய்கிறார் என்று, ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், முன்ஜாமீன் வழங்கக்கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.

மேலும், சிதம்பரத்திடம் நேர்காணலை விரும்பவில்லை; அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்கவே விரும்புகிறோம் என்றும், முன்ஜாமீன் மனு மீது குட்டி வழக்கு விசாரணை நடத்தி குற்றமற்றவர் என நிரூபிக்க சிதம்பரம் முயற்சிக்கிறார் என்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரத்துக்கு சலுகைகள் வழங்கினால் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வங்கி மோசடி வழக்குகளுக்கு பாதகமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close