ப.சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு!

  அனிதா   | Last Modified : 30 Aug, 2019 04:38 pm
3-day-custody-extension-for-p-chidambaram

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கை சிபிஐ கூறும் காரணங்கள் வலுவற்றதாக உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. அப்போது, ப.சிதம்பரத்திற்கு எதிராக கூடுதலாக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ தரப்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதையடுத்து, 5 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய நிலையில், செப்.2 ஆம் தேதி வரை (3 நாட்கள்) சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close