ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க இடைக்காலத்தடை

  அனிதா   | Last Modified : 02 Sep, 2019 02:51 pm
p-chidambaram-case

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், சிபிஐ காவலுக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதாகவும், இவ்வளவு வயதான ஒருவரை திஹார் சிறையில் அடைப்பது மிகவும் கொடுமையானது எனவே, சிதம்பரத்தக்கு வீட்டுக்காவல் வழங்கி உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

இதற்கு எதிராக சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு உதவிடும் வகையில் அவரை வரும் செப்.5ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்திய நீதிமன்றம், ப.சிதம்பரம் மனு நிராகரிக்கப்பட்டால் செப்.5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close