திகார் சிறையில் அடைக்காதீங்க: கதறிய ப.சிதம்பரம்

  அனிதா   | Last Modified : 02 Sep, 2019 05:52 pm
p-chidambaram-case

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளிநாட்டில் இருந்து பணத்தை முறைகேடாக போலி நிறுவனங்கள் மூலம் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெற்றிருப்பதாகவும், இருவரையும் கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவும் வாதாடினார். மேலும்  இது தேசநலன் சார்ந்த விவகாரம் என்பதால் ஜாமீன் கொடுக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். 

முன்னதாக, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close