ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு: உச்சநீதிமன்றம்

  அனிதா   | Last Modified : 05 Sep, 2019 10:53 am
denial-of-bail-before-pc-chidambaram-supreme-court

ப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.. மேலும், முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமையில்லை என கூறி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை  அமலாக்கத்துறை கைது செய்ய உள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close