சிபிஐ கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனு வாபஸ்

  அனிதா   | Last Modified : 05 Sep, 2019 11:41 am
chidambaram-s-petition-against-cbi-arrest-withdrawn

சிபிஐ கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21 ஆம் தேதி இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். சிபிஐ கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. இதனால், அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது. 

இதனிடையே, சிபிஐ கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றுள்ளார். ஜாமீன் மனுவுக்கு இடையூறாக இருக்கும் என கருதி மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close