சிதம்பரத்திற்கு முன் ஜாமீன்

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 02:36 pm
bail-before-chidambaram

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்ற சிபிஐ கோரிக்கையை நிராகரித்து, இந்தியாவை விட்டு  சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செல்லகூடாது என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, ரூ.1 லட்சம் பிணைத்தொகை வழங்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.

முன்ஜாமீன் கிடைத்ததால் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 2 பேரையும் சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close