சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைக்க உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 05 Sep, 2019 05:59 pm
order-to-detain-chidambaram-in-tihar-jail

ஐ .என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ .என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இம்மனு மீதான விசாரணையின்போது, தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்றும், அமலாக்கத்துறையில் சரணடைந்து விசாரணையை எதிர்கொள்ள தயார் எனவும் சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். இதனைத்தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை அரைமணி நேரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை தனிசிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கான பாதுகாப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

newsmtm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close