சிதம்பரம் சரணடைய விருப்பம் தெரிவித்த மனு மீது நாளை உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Sep, 2019 04:12 pm
chidambaram-expressed-willingness-to-surrender-orders-on-plea-tomorrow

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் சரணடைய விருப்பம் தெரிவித்த மனு மீது நாளை 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திற்கு, முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால், அமலாக்கத்துறையிடம் சரணடைவதாக சிதம்பரம் கூறியிருந்தார்.

முன்னதாக, சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்படும்போது சிதம்பரத்தை கைது செய்து விசாரிப்போம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய முயற்சி செய்த அமலாக்கத்துறை, தற்போது அவரை கைது செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. சிதம்பரம் சரணடைவதாக கூறியுள்ளதால், இந்த வழக்கு குழப்பமாகவே உள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close