ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 03:26 pm
p-chidambaram-s-petition-dismissed

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்திருந்த வழக்கில், தற்போது திகார் சிறையில் இருக்கும் சிதம்பரம், இந்த வழக்கில், தனக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில், அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைவதாக கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்சு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டிக்காமல் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார். அதேநேரம், சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வலியுறுத்தினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close