ஃபரூக் அப்துல்லா எங்கே? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

  அனிதா   | Last Modified : 16 Sep, 2019 11:24 am
where-is-farooq-abdullah

ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கடந்த 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், செப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் பங்கேற்க பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டதாகவும், தற்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். 

இந்த ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஃபரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close