அவசியம் ஏற்பட்டால் நானே காஷ்மீருக்கு செல்வேன்: நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிரடி

  அனிதா   | Last Modified : 16 Sep, 2019 12:27 pm
i-will-go-to-kashmir-if-necessary-justice-ranjan-gogoi

ஜம்மு- காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதாக மனு தாரர் கூறியதையடுத்து, அவசியம் ஏற்பட்டால் நானே நேரில் சென்று ஆய்வு செய்வேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதற்கு எதிரான வழக்கில், காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றி மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் அரசும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இயல்பு நிலை தொடர்வதை கண்காணிக்கவும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

அப்போது, காஷ்மீரில் 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் மக்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடியாத நிலையில் இருப்பதாகவும் எதிர் மனுதாரர் தர்ப்பில் கூறப்பட்டது. 

இதைகேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிமன்றத்தை அணுக முடியாத நிலை இருந்தால் அது சாதாரண பிரச்சனை அல்ல. அவசியம் ஏற்பட்டால் நானே நேரில் சென்று ஆய்வு செய்வேன் என கூறினார். பின்னர் காஷ்மீர்  விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் செப்.30ஆம் தேதி விசாரணை நடைபெறும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close