பிணை வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு:உச்சநீதிமன்றம் முடிவு

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 12:39 pm
a-separate-session-to-hear-bail-cases-supreme-court-decision

ஜாமீன் மற்றும் இடமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில், இன்று வரை, இரண்டு நீதிபதிகள் அமர்வு அல்லது அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட அமர்வு மட்டுமே அனைத்து வகை வழக்குகளையும் விசாரித்து வந்தன.

இந்த நிலையில், ஜாமீன் மற்றும் இடமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.உயர்நீதிமன்றத்தில் தற்போது 60,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையை குறைப்பதற்காக தனி அமர்வு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குகளை வழக்கமாக எடுத்துக்கொள்வதற்காக மேல் நீதிமன்றத்தில் தனிஅமர்வு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close