ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 04:03 pm
extension-of-c-of-p-chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையில், ப.சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வீட்டு உணவு வேண்டும் என்று சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், சிதம்பரத்திற்கு வீட்டு உணவும் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close