மும்பை ஆரேவில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை!

  அனிதா   | Last Modified : 07 Oct, 2019 11:08 am
supreme-court-bans-tree-cutting-in-mumbai

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கில், மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆரே என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்திமிடம் அமைக்க மெட்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் 2700 மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ நிர்வாகம் மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதியளித்தது. இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில், மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றம்  விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம், இதுவரை மெட்ரோ பணிக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் குறித்து நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் என கருத்து தெரிவித்த நீதிபதிககள் வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close