அயோத்தி வழக்கில் வரலாற்று பிழை செய்ய வேண்டாம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பராசரன் அனல் பறக்கும் வாதம்!

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 07:20 pm
ayodhya-case-hearing

"ஹிந்துக்களின் புனித இடமான, ராமஜென்ம பூமியில் ராமர் கோவில்தான் அமைய வேண்டும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று பிழை செய்துவிடக்கூடாது" என மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள ராமஜென்ம பூமி என்னும் இடத்தை, ஹிந்துக்களும், அங்கு பாபர் மசூதி அமைந்துள்ளதால் அதை முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 

ஹிந்துக்கள் தரப்பின் ராம லல்லா விராஜ்மன் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பராசரன் இன்றைய வாதத்தின் போது, "அயோத்தியில் 55 - 60 மசூதிகள் உள்ளன. அயோத்தி என்பது ஹிந்துக்களின் புனித இடம். ஹிந்துக்களின் கடவுளான ராமர் பிறந்த இடத்தை அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில் எந்த நியாயமும் கிடையாது. 

மசூதி இருக்கும் இடத்தில் மசூதிதான் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பில் வாதிடுவதை எடுத்துக்கொண்டால், கோவில் இருந்த இடத்தில் கோவில் இருப்பதுதானே நியாயம். கோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஹிந்துக்களின் புனித இடமான, ராமஜென்ம பூமியில் ராமர் கோவில்தான் அமைய வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் தொழுகை செய்யும் இடத்தை மாற்ற முடியும். ஆனால் ராமர் பிறந்த இடத்தை எப்படி மாற்ற  முடியும்? ராமஜென்ம பூமியில் பாபர் மசூதி கட்டப்பட்டதே ஓர் வரலாற்று பிழை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று பிழை செய்துவிடக்கூடாது" என அவர் வாதிட்டார். 

வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளதால், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close