உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே - ரஞ்சன் கோகாய் பரிந்துரை

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 04:36 pm
cji-ranjan-gogoi-recommends-justice-sa-bobde-as-his-successor

விரைவில் ஓய்வு பெறவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு அடுத்தபடியாக பதவியில் அமர நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

பொதுவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு, தனக்கு பிறகு அந்த பதவியில் யார் அமர வேண்டும் என்று பரிந்துரை செய்வது வழக்கம். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17 அன்று பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான எஸ்.ஏ. பாப்டேவின் பெயரை பரிந்துரைத்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ரஞ்சன் கோகாய், கடந்த அக்டோபர் 3, 2018 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close