ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு  

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 04:07 pm
chidambaram-to-trial-on-the-charge-acceptance

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி சிபிஐ நீதிமன்றம், குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

4 நிறுவனங்கள், 7 அரசு அதிகாரிகள் உள்பட 14 பேர் மீது கடந்த அக்டோபர் 18ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close