சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ!!!

  அபிநயா   | Last Modified : 22 Oct, 2019 03:53 pm
congress-leader-p-chidambaram-granted-bail-by-supreme-court

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கு ஒப்புதல் அளித்து, அவரை ஜாமீனில் விடுவிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைதான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிதம்பரத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, அவருக்கு ஜாமீன் அளிக்க முடிவு செய்து இன்று அறிவித்துள்ளது.

எனினும், அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை அவர் அழிக்கக்கூடும் என்ற காரணத்தினால் தான் டெல்லி நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது என்றும், அவருக்கு ஜாமீன் வழங்குவது சரியல்ல என்றும் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தன் கருத்தை முன்வைத்துள்ளது சிபிஐ.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close